2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் நிலைகுலைந்துபோன தலைநகர் புகுஷிமாவில் அமைந்திருந்த டெய்சி ஆலையின் அணு உலையிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு மில்லியன் டன் மதிக்கத்தக்க கதிரியக்கக் கழிவுநீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கழிவுநீரை என்ன செய்வதென்று முடிவெடுக்க ஜப்பான் அரசு, கடந்த மாதம் ஒரு குழு அமைத்தது. தண்ணீரைக் கடலுக்குள் விடலாம் அல்லது ஆவியாக்கலாம் எனப் பரிந்துரைத்த அக்குழுவின் முடிவை இறுதிசெய்ய அந்த அரசு முன்வரவில்லை.
புகுஷிமா கதிரியக்கக் கழிவுநீரை வெளியேற்ற அனுமதி: அணுசக்தி கண்காணிப்புக் குழு அனுமதி இது குறித்து ஊடகவியாளர்களிடம் பேசிய சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் கிராஸி, ஜப்பான் அரசாங்கக் குழுவின் பரிந்துரைகள் இரண்டும் சரியானவையாகவே சர்வதேச அணுசக்தி அமைப்புக்குத் தோன்றியது. அதே நேரம், அதை எப்போது செய்வது, எங்கு செய்வது, எவ்விதம் செய்வது? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இது ஜப்பான் அரசின் முடிவிற்குரிய ஒன்று.
இது தொடர்பாக இந்த இரண்டு வழிகளைத்தான் (கடலுக்குள் விடலாம் அல்லது ஆவியாக்கலாம்) நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். உலகெங்கிலும் நன்கு நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப எங்களால் இந்த இரண்டு தேர்வுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
கழிவுநீரை கடலுக்குள் வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே இந்த முறை எல்லா இடங்களிலும் செய்யப்படுகிற ஒன்றுதான். ஆலையில் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீர், நிலத்தடி நீர், ஆலைக்குள் விழும் மழை ஆகிய பல்வேறு மூலங்களிலிருந்து கதிரியக்க நீர் உற்பத்தியாகின்றது. வெளியேறும் அவற்றை விரிவான வடிகட்டுதல் செயல்முறை மூலம் தேக்கம் வைக்கப்படுகிறது. பெரும்பாலான கதிரியக்க ஐசோடோப்புகள் வடிகட்டுதல் முறையால் அகற்றப்பட்டுள்ளன.
என்றாலும், இந்தப் பிரச்னை சர்ச்சைக்குரியதாகவே மாறி நிற்கிறது. காரணம் ஜப்பானின் அண்டை நாடுகளில் சிலர் தண்ணீரை விடுவிப்பதன் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் ஜப்பானின் உள்ளூர் மக்கள், மீனவர்கள் உள்பட பலரும் இந்தக் கழிவுநீர் வெளியேற்றத்தினால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என அச்சத்திலேயே உள்ளனர்” என அவர் கூறினார்.
கடந்த மார்ச் 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் பெரும் சுனாமியைத் தூண்டியது. இது 18 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. அந்தச் சுனாமி உருவாக்கிய அணுசக்தி பேரழிவு ஜப்பானில் இன்றும் தாக்கம் செலுத்திவருவது கவனிக்கத்தக்கதாகும். இதன் காரணமாக, இம்முடிவுக்கு ஜப்பானிய பொதுமக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க : 'மனித உரிமை மீறலை ட்ரம்ப் தடுக்கத் தவறிவிட்டார்' - அமெரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சாடல்