ரஷ்யா - வடகொரியா ஆகிய இருநாடுகளின் நல்லுறவை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இன்று ரஷ்யா வந்தடைந்தார். ரயில் மூலமாக காஸன் நகரை அடைந்த அவருக்கு, அங்கு ரஷ்ய பாரம்பரியப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்யா சென்றடைந்தார் வட கொரிய அதிபர் - அணுஆயுத ஒழிப்பு
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ள வடகொரிய அதிபர் கிம்மிற்கு, காஸன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர், நாளை ரஷ்யாவின் துறைமுக நகரான விளாடிவ்வோஸ்டாக்கில் (Vladivostok) அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்தையில் ஈடுபட உள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோய்யில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - கிம் இடையே நடைபெற்ற சந்திப்பில், அணு ஆயுத ஒழிப்பு குறித்து எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.