அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, அணு ஆயதங்களை ஒழிக்கும் சர்வதேச பரப்புரையை மேற்கொண்டுவரும் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்புக் குழு ஒன்று வடகொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் அணு ஆயுதத் திட்டத்திற்காகச் செலவழித்த தொகை குறித்து விவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2009ஆம் ஆண்டில் வடகொரியா அதன் மொத்த தேசிய வருமானத்தில் 35 விழுக்காட்டை ராணுவத்திற்காக மட்டுமே செலவழித்துள்ளது.
2011ஆம் ஆண்டும் வடகொரியா, அதன் ராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் ஆறு விழுக்காட்டை அணுசக்தி மேம்பாட்டிற்காகச் செலவிட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.