இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புப் படை வெளியிட்டிருந்த அறிக்கையில், நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து கிழக்குக் கடலை நோக்கி இன்று காலை ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனையிட்டது. 'புக்குக்சோங்' ரகத்தைச் சேர்ந்த இந்த ஏவுகணை சுமார் 450 கி.மீ., தூரம் பயணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் விழுந்ததாக, அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
இதனை விமர்சித்துப் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, "இந்த ஏவுகணை சோதனை ஐநா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்துக்கு எதிரானது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.