தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வடகொரிய ஏவுகணை பயிற்சி கவலைக்குரியதல்ல..!' - ட்ரம்ப் - tokyo

டோக்கியோ: "வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை பயிற்சிகளை தொந்தரவாகக் கருதவில்லை" என்று, அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

By

Published : May 26, 2019, 4:55 PM IST

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, இம்மாத துவக்கத்தில், குறுகிய தூரம் சென்று தாக்கும் பல்வேறு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது.

இது, ஐநா பாதுகாப்பு குழு தீர்மானத்துக்கு எதிரானது என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் தங்களது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து தற்போது ட்வீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "வடகொரியா சிறிய ரக ஆயுதங்களை வைத்தே பயிற்சி மேற்கொண்டுள்ளது. இது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்தாலும், நான் அப்படி கருதவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் டிவீட்

ஜப்பான் நாட்டுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ட்ரம்ப் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இது அந்நாட்டு அதிபர் ஷின் அபேவின் கருத்துக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது.

ஹானாய் உச்சி மாநாடு:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் ஷின்சோ அபே இடையே தாய்லாந்து தலைவர் ஹனாயில், கடந்த பிப்ரவரி மாதம், இரண்டாவது உச்சி மாநாடு நடைபெற்றது. ஆனால், இதில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்படவில்லை என ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஹனாய் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, பல்வேறு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது வடகொரியா. தொலைதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா மேற்கொள்ளவில்லை என்றாலும், அண்டை நாடான ஜப்பான் இந்த பயிற்சிகளுக்கு சிவப்பு கொடி காட்டிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details