இஸ்லாமாபாத்:ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிவந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை மீண்டும் வழங்கும்வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது.