பாகிஸ்தானில் கோவிட்-19 தொற்று முதலில் பிப்ரவரி 26ஆம் தேதி உறுதி செய்யபட்டது. பின் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து அந்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் வரும் மே 31ஆம் தேதி வரை பகுதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் சிறப்புப் பிரார்த்தனைகளை தவிர்த்துவிட்டு, வீடுகளிலேயே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது.
இருப்பினும் அரசின் அறிவுறுத்தலை புறம் தள்ளிவிட்டு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கராச்சியிலுள்ள மைதானத்தில் திரண்டு ரமலான் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல தென்கொரியாவில் நடைபெற்ற மத நிகழ்ச்சி காரணமாக 46 பேருக்கு கரோன வைரஸ் தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.