2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளையொட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள மூன்று தேவாலயங்கள், சொகுசு விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து இலங்கை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு: தாக்குதல் நடத்தியவரின் மனைவி இந்தியாவில் இருப்பதாக தகவல்!
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரின் மனைவி, இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
eatee
இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரின் மனைவி புலசாந்தினி ராஜேந்திரன், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பேசிய இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஜாலியா சேனரத்ன கூறுகையில், "இரண்டு நபர்களை பிடித்து காவலில் வைத்துள்ளோம். ஆனால், அந்த நபர் நாட்டை விட்டு தப்பிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.