பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை மறு ஆய்வு செய்வதற்கான சட்ட வாய்ப்புகளைப் பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது எனத் தகவல்கள் வெளியாகின.
இந்த சமயத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், இஸ்லாமாபாத்தில் பேசுகையில், 'ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் வாய்ப்புகள் இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல்லா முடிவும் எடுக்கப்படும். ஜாதவ் காரியத்தில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் அரசியல் சாசனத்தின்படி தான் எடுக்கப்படும்' எனக் கூறினார்.
குல்பூஷன் ஜாதவ் கைது முதல் இன்று வரை..!
இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் (49), தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன் உளவு வேலையிலும் ஈடுபட்டார் என்று பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவர் மீதான வழக்கை ராணுவ நீதிமன்றம் விசாரித்து அவருக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து நெதர்லாந்தின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவை இந்தியா தூதரக ரீதியில் சந்தித்துப் பேச வாய்ப்பு தர வேண்டும்; அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என இந்தாண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
குல்பூஷன் ஜாதவ் வழக்கை இந்தியா அணுகியது எப்படி?