தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மியான்மரில் மீண்டும் வெற்றி பெற்ற ஆங் சான் சூ கி - ஆங் சான் சூ கி

மியான்மர் பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

NLD's Aung San Suu Kyi wins parliamentary seat in Myanmar's general elections
NLD's Aung San Suu Kyi wins parliamentary seat in Myanmar's general elections

By

Published : Nov 10, 2020, 1:46 PM IST

யாங்கூன்: மியான்மரில் ஆயிரத்து 117 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் வேட்பாளர்கள் ஆயிரத்து 106 பேர் உள்பட ஐந்தாயிரத்து 639 பேர் போட்டியிட்டனர்.

இதில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ் சபை) ஒரு இடத்தை பிடித்துள்ளதாகவும் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் 50 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, தேர்தலில் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சகாரோவ் மனித உரிமைக்கான பரிசு வென்றவர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்ட ஆங் சான் சூகி

ABOUT THE AUTHOR

...view details