வட கொரியாவில் இருந்து வெளியேறிய ஒருவர், தென் கொரியாவில் சட்டம் இயற்றுபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கிம் ஜாங்-உன்னின் உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிம் இறந்துவிட்டார் என்பது '99 விழுக்காடு' உறுதி என்று தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 3 வாரங்களாக கிம் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத சூழ்நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த தேர்தலில், ஒரு சிறு கட்சியின் பிரதிநிதித்துவ இடத்தைப் பெற்ற ஜி சியோங்-ஹோ, யோன்ஹாப் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 'இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் எவ்வளவு காலம் தாங்கியிருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
கடந்த வார இறுதியில் கிம் இறந்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த வார இறுதியில் வட கொரியா, இது தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடும்.
இது 100 விழுக்காடு உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், 99 விழுக்காடு என்னால் கிம் இறந்து விட்டார் என்று உறுதியாக சொல்ல முடியும். வட கொரியா ஒரு சிக்கலான அடுத்தடுத்த பிரச்னையுடன் சிக்கிக் கொண்டிருக்கிறது.