அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அரசின் வெளியுறவுக் கொள்கை முடிவு குறித்து பேசிய கருத்துக்கு வட கொரியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அணுக் கொள்கை குறித்து ஜோ பைடன் விமர்சிக்கும்விதமாக கருத்து தெரிவித்தார்.
அதற்குப் பதிலடி தரும்விதமாக வட கொரியா சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில், "அமெரிக்க அதிபர் தனது பொறுப்பற்ற உரைமூலம் கடும் தவறைச் செய்துள்ளார். அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்க வட கொரியா தயாராகவுள்ளது. இது அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை அளிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.