தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா வைரசுக்குத் தடுப்பூசி - வடகொரியா அறிவிப்பு

சியோல்: கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளதாக, வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று
வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று

By

Published : Jul 18, 2020, 4:26 PM IST

இதுதொடர்பாக வட கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான மிரேயில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வட கொரியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தற்போது கரோனா வைரஸ் தொற்றிற்கான தடுப்பூசியைக் உருவாக்கிவருகின்றனர்.

இம்மாதத்தில் இருந்து இதற்கான மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக விலங்குகளிடத்தில் சோதனை நடத்தப்பட்டு, நோயெதிர்ப்பு, பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும்.

அது மட்டுமின்றி இத்தடுப்பூசியை வட கொரியாவின் அறிவியல் அகாடமியின் பயோ இன்ஜினியரிங் மையம் ஆய்வு செய்துவருகின்றது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வட கொரியாவின் பொருளாதார, மருத்துவச் சூழ்நிலைகளைப் பார்த்தால் இது நம்பும் படியாக இல்லை என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பாளர்கள் பற்றிய விவரங்களை வட கொரியா எவ்வித அறிவிப்பையும் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்கிற நிலையில், அந்நாட்டு விஞ்ஞானிகள் மூன்றாம் கட்டமாக கரோனாவுக்கான மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றதாக, யோன்ஹாப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா பரிசோதனையில் அமெரிக்கா முதல் இடம், இந்தியா 2ஆவது இடம் -வெள்ளை மாளிகை தகவல்!

ABOUT THE AUTHOR

...view details