இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நேற்று நள்ளிரவு மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பிரதான நகரங்களும் இருளில் மூழ்கியுள்ளன.
மின் அதிர்வெண் திடீரென குறைந்ததே மின் தடைக்கு காரணம் என தேசிய டிரான்ஸ்மிஷன் டெஸ்பாட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர் உமர் அயூப், “மின் விநியோக அமைப்பில் அதிர்வெண் திடீரென 50 முதல் 0 வரை குறைந்தது. இது மின் தடைக்கு காரணமாக அமைந்தது” என ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில், #blackout என்ற சொல் ட்விட்டரில் அதிகாலை 2:18 மணி வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ட்வீட்களுடன் ட்ரெண்ட் ஆனது.
இதையும் படிங்க : பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - பாகிஸ்தான் முன்னாள் தூதர் தகவல்