காபூல் : ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது என டோலோ (TOLO) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அரசுக்கும், அரசுக்கு எதிராக போராடிவரும் தலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை இந்த மாதத்தின் தொடக்கத்தில் கத்தார் நாட்டில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் 85 விழுக்காடு இடங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கன்- தலிபான்கள் இடையேயான போரில் புகைப்படங்கள் எடுக்கச் சென்ற இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கையெழுத்தாகிறது ஷாஹூத் அணை ஒப்பந்தம்? ஆப்கன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!