நியூசிலாந்து நாடாளுமன்றம் நேற்று கூடியபோது, பிரதிநிதிகளின் வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எம்பி தமதி காஃபியின் குழந்தை அழுகத் தொடங்கியது. அந்தக் குழந்தை வாடகைத்தாயின் மூலம் பிறந்தது. பின்னர் குழந்தை அழுவதைப் பார்த்த சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட், குழந்தையை சமாதானப்படுத்தி புட்டி பால் கொடுத்தார்.
பின்னர், குழந்தையை கையில் வைத்துக் கொண்டே அவையை நடத்தினார். குழந்தை அவ்வப்போது சிணுங்கும்போதேல்லாம் பால் புகட்டி சமாதானப்படுத்தினார். ட்ரெவர் குழந்கைள் மீது அலாதிய பிரியம் கொண்டவர் என்று அவையில் இருப்பவர்கள் கூறினர்.