தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நியூசிலாந்து தேர்தல்: அபார வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் ஜெசிந்தா ஆர்டன்

நியூசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராகிறார்.

New Zealand
New Zealand

By

Published : Oct 17, 2020, 7:48 PM IST

நியூசிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். அவரது லிபரல் தொழிலாளர் கட்சி சுமார் 50 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தேசிய கட்சி 27 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளது.

வெற்றிக்குப்பின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் ஜெசிந்தா, நியூசிலாந்தின் 50 ஆண்டுகால வரலாற்றில், இதுபோன்ற ஒரு வெற்றியை யாரும் பெற்றதில்லை என பெருமிதம் கொண்டார். ஒரு அசாதாரண சூழலில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் நியூசிலாந்து மக்கள் தங்களின் தனித்துவத்தை நிரூபித்து காட்டியுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

40 வயதே ஆன ஜெசிந்தா 2017ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவிட்-19 பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்ததால் உலக நாடுகள் மத்தியில் இவருக்கு வெகுவான பாராட்டு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாட்டை விட்டு வெளியேறுவேன் - ட்ரம்பின் திடீர் முடிவின் காரணம்?

ABOUT THE AUTHOR

...view details