தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு நியூசி. நிதியுதவி - நியூசிலாந்து

கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு நியூசிலாந்து ஆதரவாக இருக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு நியூசிலாந்து நிதியுதவி
கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு நியூசிலாந்து நிதியுதவி

By

Published : Apr 28, 2021, 7:58 PM IST

நியூசிலாந்து:கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு அளித்துவருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் நானாயா மஹுதா தெரிவித்துள்ளார்.

"கடினமான இந்த நேரத்தில் இந்தியாவிற்குத் துணை நிற்கிறோம். சவாலான சூழலை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களைப் பாராட்டுகிறோம்" என நானாயா மஹுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு உதவும் வகையில் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 7,19,000 டாலர் பணத்தை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணம் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் இந்தியாவிற்கு வழங்கும்.

இதையும் படிங்க:இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்' சீனா அரசு!

ABOUT THE AUTHOR

...view details