நியூசிலாந்து: இளம் தலைமுறையினர் அடிமையாகாமல் இருப்பதற்காக சிகரெட்டுகளுக்குத் தடைவிதிக்க நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2027ஆம் ஆண்டில் 14 வயதுக்குள்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் சிகரெட் வாங்க முழுத் தடைவிதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சிகரெட்டுக்குத் தடை - அரசு அதிரடி - நியூசிலாந்து அரசு உத்தரவு
இளம் தலைமுறையினர் அடிமையாகாமல் இருப்பதற்காக சிறுவர்கள் சிகரெட் வாங்க நியூசிலாந்து அரசு முழு தடைவிதித்துள்ளது.
சிகரெட்டுக்கு தடை
இது குறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை இணையமைச்சர் ஆயிஷா வெரால் கூறுகையில், இளம்தலைமுறையினர் சிகரெட் பிடிக்கவே கூடாது என்ற நிலையை உருவாக்கப்போவதாகவும், இளைஞர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்ற சூழலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேலையில் மந்தம்: ஜூம் மீட்டிங்கில் 900 ஊழியர்கள் பணிநீக்கம்