தமிழ்நாடு

tamil nadu

கொரோனா வைரஸ்: தொடர்ந்து 2ஆவது நாளாக பாதிப்பு குறைவு

By

Published : Feb 19, 2020, 2:36 PM IST

பெய்ஜிங் : சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்தும் கீழ் குறைந்துள்ளது.

Corona Virus
Corona Virus

சீனாவில் பரவிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று நோயால் புதியதாகப் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த சீன நாட்டின் சுகாதாரத் துறை, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 749 பேருக்கு கொவிட்-19 வைரஸ் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், 136 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பலி எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 4ஆக உயர்ந்துள்ளது.

சீனாவைத் தவிர்த்து ஹாங்காங் (சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியம்), தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் யோகோஹாமா துறைமுகம் அருகே சிறைபிடிக்கப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்ஸ்' சொகுசுக் கப்பலில் 542 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி மூலம் விவரித்துள்ளார்.

ஜப்பானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பல்

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஐநா பொதுச் செயலாளர், ஆன்டோனியோ குட்டரெஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் கைமீறி செல்லவில்லை என்றும், ஆனால் நிலைமை மிக மோசமாக உள்ளதால் அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கொரோனா முகாமிலிருந்து 231 இந்தியர்கள் உள்பட 238 பேர் விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details