தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தொலைத்தொடர்பு சேவைக்கான புதிய செயற்கைக்கோளை ஏவிய சீனா! - சீனா செயற்கைக்கோள்

Tiantong 1-03 என்ற புதிய தொலைத்தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

New mobile telecommunication satellite launched by China
New mobile telecommunication satellite launched by China

By

Published : Jan 20, 2021, 10:39 PM IST

பீஜிங் (சீனா):தொலைத்தொடர்பு சேவைக்கான புதிய செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது.

Tiantong 1-03 என்ற புதிய செயற்கைக்கோள் Xichang மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது, கைப்பேசி தொலைதொடர்பு சேவையை பயனாளர்களுக்கு தடையில்லாமல் வழங்குவதற்கு இந்த செயற்கைக்கோள் பெரும் உதவியாக இருக்கும்.

சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் வானிலை மாற்றங்களால் ஏற்படும் தொலைதொடர்பு தடைகளை அகற்ற உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு மேலும் 21 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக Xichang செயற்கைக்கோள் மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details