ஈரானின் புதிய அதிபராக இப்ராஹிம் ராய்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்கவுள்ளது. இந்த அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சர்வதசே அரங்கில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்
அணு உற்பத்தி, செறிவூட்டல் தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே நீண்ட நாள்களாக மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு நாடுகளுக்கும் இடையே அணு ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு கையெழுத்தானது.
இருப்பினும், அணு ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாகக் கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடையை விதித்துவருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவில் புதிய அரசு அமைந்தது.
இதையடுத்து, ஈரானிலும் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிதாக பொறுப்பேற்கவுள்ள இப்ராஹிம் ராய்சி தலைமையிலான அரசு, "தற்போதைய அணு கொள்கையில் எந்தவித மாற்றமும் இருக்கப்போவதில்லை. 2015 ஒப்பந்தப்படி ஈரான் தொடர்ந்து செயல்படும்" எனத் தெரிவித்துள்ளது.
இரு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்கள் சுமூகமான உறவுக்கு வழிவகுக்குமான என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிங்க:ரஷ்ய விமானம் மாயம்- 28 பேரின் கதி என்ன?