தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவைத் தடுக்க நடைபெற்ற மத நிகழ்ச்சியால் 46 பேருக்கு வைரஸ் தொற்று! - New coronavirus cluster linked to South Korean church

சியோல்: கோவிட் 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தென் கொரியாவிலுள்ள சர்ச்சில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட 46 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

South Korean church
South Korean church

By

Published : Mar 17, 2020, 4:27 PM IST

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்துவருகிறது. இருப்பினும் தென் கொரிய, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பேரழிவை உண்டாக்கும் தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதைத் தடுக்க வேண்டும் என்று பல நாட்டு அரசாங்கங்களும் கேட்டுக்கொண்டுவருகிறது.

இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் மத ரீதியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டே வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் கோமியத்தின் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறி ஓர் நிகழ்ச்சியை ஹிந்து மகா சபா டெல்லியில் நடத்தியதிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிவையில், இதேபோல கோவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நிகழ்ச்சி என்றுக் கூறி தென் கொரியாவிலுள்ள ஒரு சர்ச்சில் மார்ச் 8ஆம் தேதி பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அதில் கலந்துகொண்ட 90 பேரின் வாயில் உப்புத் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த சர்ச்சின் பாதிரியாருக்கும் அவரது மனைவிக்கும் கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 40 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த சர்ச்சின் பாதியார் கூறுகையில், "நடைபெற்ற சம்பவத்திற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: தென் கொரியாவில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details