நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி நீக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.சி.பி எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரதமராக தேர்வு செய்யப்பட்ட கே.பி. சர்மா ஒலி 2018ஆம் ஆண்டில் இருந்து பொறுப்பு வகிக்கிறார்.
அண்மையில் இந்தியாவை விமர்சிக்கும் வகையில், சில கருத்துகளைத் தெரிவித்த ஒலி, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒலியின் இந்த நடவடிக்கை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் சரி, ராஜாங்க ரீதியாகவும் தவறான ஒன்று எனத் தெரிவித்த கட்சியின் நிலைக்குழு, அவரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்திவருவதாக தகலல்கள் வெளியாகியுள்ளன.