நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளிடையே உள்ள எந்தவொரு சர்ச்சைகளையும் அமைதியான பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் மூலம் தீர்க்கலாம் என கூறியுள்ளார். மேலும் அவர் காஷ்மீரிய பகுதிகள் அனைத்தும் அமைதியானதாகவும், நிலையான முன்னேற்றத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
காஷ்மீரின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! - நேபாள அமைச்சர் - காஷ்மீர் குறித்த நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
காத்மாண்டு: ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றங்களை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக நேபாள நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி கூறியுள்ளார்.
பிரதீப் குமார் கியாவாலி
மேலும், ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அப்பகுதி விரைவில் நிலையான முன்னேற்றத்தை அடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.