நேபாளத்தில் கே.பி. ஒலி தலைமையிலான மைனாரிட்டி அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இதையடுத்து நேபாள அரசு ஆட்சியைத் தொடர்வதா அல்லது புதிய தேர்தல் நடத்துவதா என்பது குறித்த வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது.
இரண்டு வாரங்களாக விசாரணை தொடர்ந்த நிலையில், இன்று (ஜூலை 12) இது குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியுபாவை அடுத்த இரண்டு நாள்களுக்குள் நியமிக்க வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பிரதமர் ஒலிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. புதிய தேர்தல் மூலம் மீண்டும் ஒலி ஆட்சிக்கு வரத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெல்டா வைரஸுக்கு எதிராக 90% பாதுகாப்பு தரும் ஸ்புட்னிக் தடுப்பூசி!