தமிழ்நாடு

tamil nadu

தொடரும் இந்தியா-நேபாளம் வார்த்தை விளையாட்டு

By

Published : Jul 14, 2020, 12:30 AM IST

காத்மாண்டு: போலியான, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு நாட்டின் தலைமைக்கு துஷ்பிரயோகம் செய்யும் ஊடகங்களின் ஒளிபரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு  நேபாளம் இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர குறிப்பை அனுப்பியுள்ளது.

தொடரும் இந்தியா-நேபாளம் வார்த்தை விளையாட்டு
தொடரும் இந்தியா-நேபாளம் வார்த்தை விளையாட்டு

தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களையும் நேபாளம் நிறுத்திய சில நாள்களுக்கு பின்னர், நாட்டின் தேசிய உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக அந்நாட்டின் பிரதமர் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் இந்திய தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் வழியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பபட்ட ராஜதந்திர குறிப்பில், இந்திய ஊடகங்களில் ஒரு பகுதியினரால் பரப்பப்பட்ட செய்தி போலியானவை, ஆதாரமற்றவை மற்றும் உணர்ச்சியற்றவை. நேபாள பிரதமரின் உதவியாளரின் கூற்றுப்படி, நேபாளம் மற்றும் நேபாள தலைமைக்கு இழிவானது."இதுபோன்ற தவறான தகவல்களைத் தருவது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச பொது ஒழுக்கத்தின் உணர்வையும் பாதிக்கின்றன" என்று அமைச்சகம் குறிப்பில் தெரிவித்துள்ளது.

"இந்திய ஊடகங்களின் ஒரு பகுதியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தவறான எண்ணம் கொண்ட பரப்புரை நேபாள மக்களின் உணர்வுகளையும் நேபாள தலைமையின் ஆளுமையையும் ஆழமாக பாதித்துள்ளது" இதுபோன்ற செயல்கள் ஊடகங்களில் இடம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய அலுவலர்களிடம் கோரியது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மே 8 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலையை திறந்து வைத்ததை அடுத்து இந்தியா-நேபாள இருதரப்பு உறவுகள் சீர்குலைந்தன.

இந்த சாலை நேபாள எல்லைக்குள் வருவதாக அந்நாட்டு அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. சாலை நோபாளத்தின் எல்லைக்குள் உள்ளது என்ற கூற்றை இந்தியா நிராகரித்தது. பின்னர், இந்தியாவின் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய, நேபாளம் நாட்டின் அரசியல் வரைபடத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் புதுப்பித்து வெளியிட்டது.

நேபாளத்தின் பிராந்திய உரிமை கோரல்களை 'செயற்கை விரிவாக்கம்' 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று இந்தியா குறிப்பிட்டது. வரைபட பிரச்னை தொடர்பாக இந்தியா ஒரு ராஜதந்திர குறிப்பை நேபாளத்திடம் ஒப்படைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details