தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாளத்தின் புதிய வரைபடம்: ஐநா சபைக்கு அனுப்ப திட்டம்! - நேபாள அமைச்சர் பத்ம ஆர்யால்

காத்மாண்டு: இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைப்படத்தை ஐநா சபைக்கு அனுப்பவுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

epal
nepal

By

Published : Aug 2, 2020, 10:29 PM IST

கடந்த மே மாதம் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார். அதில், லிபுலேக், கல்பானி, லிம்பியாதுரா ஆகிய இந்தியப் பகுதிகள் இணைக்கப்பட்டிருந்தன. இந்தப் புதிய வரைபடம் நடவடிக்கைக்கு இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால், நேபாளத்தில் பிரதமர் ஆட்சிக்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்நிலையில், நேபாளத்தின் புதிய வரைப்படம் ஐநா சபைக்கு அனுப்பவுள்ளதாக நேபாள அமைச்சர் பத்ம ஆர்யால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "லிபுலேக், கல்பானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்ட நேபாளத்தின் புதிய வரைப்படத்தை ஐநா சபை உட்பட பல சர்வதேச அமைப்புகளுக்கும், கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்களுக்கும் விரைவில் அனுப்பவுள்ளோம்.

முதற்கட்டமாக, 4 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, 25 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகர்களுக்கு இலவசமாகவும், மக்களுக்கு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details