நேபாள அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என, தொடர்ச்சியாக அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதானத் தலைவர்கள், பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதை சீர் செய்யும் வேலையில் பிரதமர் ஒலி, தனக்கு எதிராக இந்நடவடிக்கையின் பின்னணியில் இந்தியா உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு ஆளும் கட்சியின் உறுப்பினர்களே கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், சீனத் தூதர் ஹோ யான்கியுடன் பிரதமர் ஒலி திடீரென தொடர் சந்திப்பை மேற்கொண்டார். இது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், ”அதிகார உறவு தொடர்பான நடைமுறைகள் அனைவருக்கும் பொருந்தும். எனவே கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உரிய பொறுப்புடன் நடத்துகொள்ள வேண்டும்” என மறைமுகமாக சாடியுள்ளார்.
நேபாள பிரதமர் ஒலி தொடர் அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவித்துவரும் நிலையில், இந்தியா, சீன நாடுகளின் பின்னணியில் பேசுபொருளாக அமைந்துள்ள பிராந்திய அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உடல்நலக்குறைவு தொடர்பாக விசாரணை!