தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாளத்தில் தேர்வு ரத்து - மாணவர்கள் போராட்டம்! - protest

காத்மாண்டு: நேபாளத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு ரத்துசெய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் போராட்டம்

By

Published : Mar 30, 2019, 12:04 PM IST

நேபாளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வை ரத்து செய்வதாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தின் மாகாணம் 2-ல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்விவகாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கயேதேந்திரா யாதவ், "இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தேர்வு அறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாகாணம் 2-ல் வினாத்தாள் கசிவு நடைபெறவில்லை. எட்டு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. மாகாணம் 2-ல் தான் வினாத்தாள் கசிவு நடைபெற்றதாக நம்ப வைக்கப்படுகிறது" என்றார்.

இதற்கிடையே, அந்நாட்டு மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details