நேபாளத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை வீசிய புயலினால் பாரா, பார்சா ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தினால் தெற்கு நேபாளத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
நேபாளம் மழை: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு! - பலி எண்ணிக்கை
காத்மண்ட்: நேபாளத்தை அதிரவைத்த புயலின் தாக்கத்தால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
புயலினால் சேதமடைந்த பகுதி
மேலும், இந்த புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகஉயர்ந்துள்ளது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.