தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாளத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஏழு கிலோ தங்கம் பறிமுதல்! - seized

காத்மாண்டு: சீனாவிலிருந்து நேபாளத்திற்கு கடத்தப்பட்ட ஏழு கிலோ தங்கத்தை நேபாளம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேபாளத்தில் ஏழு கிலோ தங்கம் பறிமுதல்

By

Published : Apr 24, 2019, 9:15 AM IST

சீனா மற்றும் நேபாளத்தை இணைக்கும் மிக முக்கிய பகுதியாக கெருங் துறைமுகம் திகழ்கிறது. இவ்வழியாக சட்டவிரோதமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தப்படுவதாக ரசுவா மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய லாரியை சோதனை செய்த காவல்துறையினர், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஏழு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஷெர் ருவாபூ (30) எனும் லாரி ஓட்டுநரை கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்கம், நேபாள ரூபாய் மதிப்பில் ரூ 3. 5 கோடியாகும்.

ABOUT THE AUTHOR

...view details