தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவின் புதிய வரைபடத்துக்கு எதிர்ப்பு! நேபாளில் 20 பேர் கைது! - nepal communist party

காத்மாண்டு (நேபாளம்): இந்தியாவின் புதிய வரைபடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் அமைப்பைச் சேர்ந்த 20 பேரை அந்நாட்டுக் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Anti India protest

By

Published : Nov 11, 2019, 12:40 PM IST

கம்யூனிஸ்ட் கட்சியின் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவின் திருத்தப்பட்ட புதிய வரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த கைது நடவடிக்கை மைத்திகர் எனுமிடத்தில் நடந்ததாகக் காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். கலாபனியை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டிய இந்தியாவின் புதிய வரைபடத்தைக் கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நவம்பர் 6ஆம் தேதி அந்த அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதே இந்த கைது நடவடிக்கைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றிய பிரதேசங்களின் (யு.டி) புதிய வரைபடங்களையும், லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களை இணைத்தும் இந்திய அரசு புதிய வரைபடத்தைக் கடந்த வாரம் வெளியிட்டதன் விளைவாக அந்த அமைப்பு போராட்டத்தை அறிவித்தது.

இந்தியாவின் புதிய வரைபடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டகாரர்கள்

கலாபனி எல்லைப் பிரச்னை: நேபாள பிரதமருக்கு தலைவர்கள் அழுத்தம்!

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் கே பி ஷர்மா ஓலி சனிக்கிழமை பிரதமர் இல்லத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.இந்த கூட்டத்தின் போது, ​​முன்னாள் பிரதமர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும், பிரச்னையை தீர்க்க உயர் மட்ட அரசியல் குழுவைஅமைக்கவும் கேட்டுக் கொண்டனர்.

‘இந்திய - நேபாள உறவில் உருவாகியுள்ள புதிய சிக்கல்!’ - ஸ்மிதா சர்மா

ABOUT THE AUTHOR

...view details