சமீபத்தில் நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி, இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட காரணத்தினால், இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள், இந்தியா குறித்து அவதூறு கருத்து பேசிய குற்றத்திற்காக உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - மூத்த தலைவர்களை சந்தித்து வரும் நேபாளப் பிரதமர் - அதிபர் தேவி பண்டாரி
காத்மண்டு : நேபாளப் பிரதமர் கே.பி ஷர்மா ஒலிக்கும் ஆளும் கட்சியை சேர்ந்த புஷ்பா கமல் தஹால் பிரச்சந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு, முடிவுகள் எட்டப்படாமல் முழுமையற்று முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலி
இதனால், ஆட்சியில் ஏற்பட்டு வந்த சிக்கலை சரி செய்ய, ஆளும் கட்சியின் மூத்தத் தலைவரான பிரச்சந்தாவை அவ்வப்போது ஒலி சந்தித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சந்திப்பு முழுமையாக முடிவு பெறாத நிலையில், வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரச்சாந்தாவை சந்திக்க ஒலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அதிபர் மாளிகையான ஷீத்தல் மாளிகையில் அதிபர் தேவி பண்டாரியை சந்தித்த ஒலி, தற்போதைய அரசியில் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.