இந்தியாவைப் பற்றி நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி விமர்சித்தது அரசியல் ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் முறையல்ல. இரு நாட்டு உறவை மோசமாக்கும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டு கூறிய அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்தக் குரல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டத்திலும் ஒலித்தது. கூட்டத்தின் போது அந்நாட்டின் பிரதமர் ஒலி இந்தியா மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதற்கு மற்ற தலைவர்களான புஷ்ப கமல் தகல், மாதவ் குமார் நேபாள், ஜால்நாத் கானல், பாம்தேவ் கவுதம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.