முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நேபாள பிரதமர் ஒலி வெளியிட்ட செய்தியில், "இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறப்பு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன். இந்திய மக்களுக்கும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேபாளம் சிறந்த நண்பரை இழந்துள்ளது - பிரணாப் குறித்து நேபாள பிரதமர் ஒலி - பிரணாப் குறித்து நேபாள பிரதமர் ஒலி
காத்மாண்டு: பிரணாப் என்கிற சிறந்த நண்பரை நேபாளம் இழந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் ஒலி தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் ஒலி
அவரின் இறப்பால், நேபாளம் சிறந்த நண்பரை இழந்துள்ளது. பொது வாழ்க்கையில் தான் வகித்த பல்வேறு பதவிகளின் மூலம் இந்திய, நேபாள உறவை அவர் மேம்படுத்தியுள்ளார். இதில், அவர் ஆற்றிய பங்கை என்றென்றும் நினைவு கூரலாம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரணாப்புக்கு ஏன் பிரதமர் பதவி வழங்கப்படவில்லை?