இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது உரிமை கோரும் விதமாக நேபாள அரசு புதிய வரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அத்துமீறி வரும் நபர்களால்தான் தங்கள் நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததாக நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்திய சேனல்களுக்கான தடையை விலக்கிக்கொண்ட நேபாளம்! - கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்
காத்மண்டு: ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த சில செய்திச் சேனல்களைத் தவிர மற்ற இந்திய சேனல்களுக்கு நேபாள அரசு விதித்திருந்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நேபாள நாட்டிற்கு எதிராக இந்திய சேனல்கள் நேபாளத்தில் செய்தி பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியைத் தவிர மற்ற அனைத்து இந்திய செய்திச் சேனல்களை ஒளிபரப்ப நேபாள அரசு திடீரென தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அந்நாட்டில் ஜூலை 9ஆம் தேதி மாலை முதல் அமலுக்கு வந்தது.
இதனிடையே நடைபெற்ற கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தில், ஆட்சேபனைக்குரிய கருத்தை ஒளிபரப்பிய ஒரு சில செய்திச் சேனல்கள் இன்னும் நாட்டில் தடை பட்டியலில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இந்திய செய்திச் சேனல்களுக்கான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் துர்பா சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.