கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, தற்போது பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது. இருப்பினும், சீனாவில் கடந்த சில நாள்களாகவே வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.
இந்நிலையில் சீனாவில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 89 விழுக்காட்டினர் குணமடைந்துவிட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த டிசம்பர் மாதம் முதல் 81,093 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 72,703 பேர் குணமடைந்துவிட்டனர். 5,120 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மார்ச் 22ஆம் தேதி நள்ளிரவு வரை 3,270 பேர் உயிரிழந்துள்ளனர்.