மிரினே புயல் (typhoon Mirinae ) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜப்பானில் உள்ள சிபா மாகாணத்திலிருந்து சுமார் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலை நேர நிலவரப்படி, மிரினே புயல் வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 83 கி.மீ., முதல் 126 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.