எகிப்து நாட்டில் முதல் முறையாக பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை நீதிபதி முகமது ஹோசம் இல்-தின் 98 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அந்நாட்டின் அதிபராக அப்தேல் பதாஹ் இல்-சிசி அண்மையில் பதவியேற்றார். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் அவர், பெண் உரிமை ஆர்வளர்களின் கோரிக்கையை ஏற்று பெண் நீதிபதி நியமனத்திற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.