ரமோன் மக்சேசே விருது
ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ரமோன் மக்சேசே விருது 1957ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. பிலிப்பைன்ஸின் மூன்றாவது அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக வழங்கப்படும் இந்த விருது ஆசியாவில் சிறந்த சேவையாற்றும் நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் இவ்விருதை 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகர் டி.எம். கிருஷ்ணா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டுக்கான ரமோன் மக்சேசே விருது
இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான ரமோன் மக்சேசே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. யின் மூத்த ஆசிரியரான ரவிஷ் குமாருக்கு அவரது 'ப்ரைம் டைம்' நிகழ்ச்சிக்காக இந்த ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது வழங்கப்படவுள்ளது. குரலற்றவர்களின் குரலாகவும் நிஜ வாழ்க்கையில் சாமானியன் சந்திக்கும் சிக்கல்களைப் பேசும் நிகழ்ச்சியாக 'ப்ரை டைம்' இருப்பதாக விருது வழங்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ரமோன் மாக்சேசே விருது பெற்றவர்கள்
யார் இந்த ரவிஷ் குமார்?
44 வயதான ரவிஷ் குமார் பிகார் மாநிலத்தின் மோதிஹாரி என்ற இடத்தில் பிறந்தவர். பாட்னாவிலுள்ள லயோலா மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
1996ஆம் ஆண்டு யில் பணிபுரியத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு 24 மணிநேர இந்தி செய்தி சேனல் தொடங்கப்பட்டது முதல் 'ப்ரைம் டைம்' என்ற தினசரி நிகழ்ச்சியை இவர் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.