ஊழல் வழக்கில் கைதாகி சிறை தண்டணை அனுபவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மருத்துவ காரணங்களுக்காக ஆறு வாரம் பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி! - hospital
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ பிரிசோதனைக்காக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப்
இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் கூறுகையில், முழு உடல் பரிசோதனைக்காக கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.