இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவருமான நவாஸ் ஷெரிப் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது லண்டனில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவீன்பீல்ட் மற்றும் அல் அசீசியா ஸ்டீல் ஆலை ஊழல்களில் சிக்கிய அவர், வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதாகக்கூறி அவரை பிரகனடப்படுத்தப்பட்ட குற்றவாளியாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், அவரது பாஸ்போர்டை பிப்ரவரி 16ஆம் தேதியுடன் ரத்து செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார். மேலும், அவரை நாடு கடத்த வேண்டும் என பிரிட்டன் அரசுக்கு முன்னதாக, பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.