டோக்கியோ: இரண்டாம் உலகப் போரில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி , அமெரிக்கா ராணுவம் நாகசாகி மீது அணு குண்டு வீசியது. இதில், லட்சகணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் 76ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நாகசாகியில் உள்ள அமைதிப் பூங்காவில், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
கரோனா காரணமாக, அஞ்சலி நிகழ்வில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அணுகுண்டு வீசப்பட்ட நேரம் காலை 11:02க்கு இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. நாகசாகி அமைதிப் பூங்காவில், குண்டு வீச்சில் உயரிழந்த 1,89,163 பேரின் பெயர் கொண்ட கல்லறை கல் உள்ளது. அதில், 3,202 பெயர்கள் கடந்தாண்டு சேர்க்கப்பட்டவை.