கிழக்கு கடலை நோக்கி, குறைந்த தூரம் பயணிக்கும் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனையிட்டதாக தென் கொரியா நேற்று புகார் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து 97 கி.மீ. உயரத்தில், 380 கி.மீ. பயணித்ததாக தென் கொரிய கூடுதல் பாதுகாப்புத் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதை உறுதிசெய்யும் விதமாக பிரமாண்ட ஏவுகணை தளவாடங்களை வடகொரியா வெற்றிகரமாக நேற்று சோதனையிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 5 முதல் 20ஆம் தேதி வரை அமெரிக்கா - தென் கொரியா கிழக்கு கடலில் மேற்கொண்ட ராணுவக் கூட்டுப் பயிற்சிக்கு கண்டம் தெரிவித்து, ஏவுகணை சோதனைகளில் வடகொரிய தொடர்ந்து ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.