மியான்மரில் ரோஹிங்கிய அகதிகள் தொடர்பான அரசு ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் லா லோன், கியா சியோ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு, 2018ஆம் ஆண்டு தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
511 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு குடும்பத்தை சந்தித்த பத்திரிகையாளர்கள்!
யாங்கூன்: 511 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்த பத்திரிகையாளர்கள் தங்களது குடும்பத்தைச் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தை சந்தித்த பத்திரிகையாளர்கள்
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் வின் மியிண்ட் புத்தாண்டை முன்னிட்டு பொதுமன்னிப்பு வழங்கினார். அதன்படி, லா லோன், கியா சியோ ஆகியோரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சக பத்திரிகையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதனையடுத்து, தங்களது குடும்ப உறுப்பினர்களை அவர்கள் சந்தித்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.