தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மியான்மரில் தொடரும் சர்வாதிகாரம் - விக்கிப்பீடியா முடக்கம்! - விக்கிப்பிடியா முடக்கம்

நேபிடா: மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் இணையத்தை முடக்கியதை தொடர்ந்து, தற்போது விக்கிப்பீடியாவை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர்
மியான்மர்

By

Published : Feb 21, 2021, 4:28 PM IST

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கைதுசெய்த அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், விக்கிப்பீடியாவை அனைத்து மொழிகளிலும் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இணைய கண்காணிப்பு நிறுவனமான நெட்பிளாக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், "உறுதியாகியுள்ளது: இணைய என்சைக்ளோபீடியாவான விக்கிப்பீடியா அனைத்து மொழிகளிலும் முடக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சியின் இணைய தணிக்கையின் ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆறாவது நாளாக, நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details