தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் : ஊரடங்கு மத்தியில் ரமலான் நோன்பு தொடங்கியது! - Muslims in Pakistan

பாகிஸ்தான் : ஊரடங்கு மத்தியில் ரமலான் நோன்பு தொடங்கியது! இஸ்லாமாபாத் : கரோனா வைரஸ் காரணமாகப் பாகிஸ்தானில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், அங்குள்ள இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

muslim
muslim

By

Published : Apr 26, 2020, 11:29 PM IST

கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், இஸ்லாமியப் பெருமக்களின் புனித மாதமான ரமலான் சனிக்கிழமை தொடங்கியது .

இதனிடையே, பாகிஸ்தானிலும் கரோனா காரணமாக மசூதிகள் மூடப்பட்டுள்ள சூழலில், அங்கு இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலிருந்தபடியே தொழுது நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

ஜஃபாரிய பேரிடர் மையம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும் அரசாங்கம் விதித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதித்து, சாலையோரத்தில் இஃப்தார் (நோன்பை முடிக்க மாலையில் வழங்கப்படும் விருந்து) வழங்குவதை ரத்து செய்துள்ளன.

ஊரடங்கால் வழக்கத்துக்கு மாறாக கராச்சியில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாகிஸ்தானில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கரோனா நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க :

ABOUT THE AUTHOR

...view details