தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது' - மதகுரு சோஹைல் பட் - பாகிஸ்தான் சீக்கியர்கள்

லாகூர்: சீக்கியர்களை அச்சுறுத்தும் தீர்க்கத்தரிசி ஹஸ்ரத் ஷா காகு செஸ்டியின் மஜாரின் பராமரிப்பாளரும், தவாத்-இ-இஸ்லாமியின் (பெரில்வி) ஆர்வலருமான  சோஹைல் பட், பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான இஸ்லாமிய நாடு எனத் தெரிவித்துள்ளார்.

Muslim cleric in Lahore threatens Sikhs, aims to occupy gurudwara
Muslim cleric in Lahore threatens Sikhs, aims to occupy gurudwara

By

Published : Jul 28, 2020, 3:00 AM IST

லாகூரில் உள்ள லாண்டா பஜாரில் ஒரு கடையை நடத்திவரும் சோஹைல் பட், சில உள்ளூர் ஆர்வலர்களுடன் குருத்வாரா ஷாஹீத் பாய் தரு சிங்கின் நிலத்தை ஆக்கிரமித்து, பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் (பிஜிபிசி) முன்னாள் தலைவர் கோபால் சிங் சாவ்லாவை அச்சுறுத்தியுள்ளார்.

குருத்வாரா ஷாஹீத் பாய் தாரு சிங் மற்றும் அதன் அருகிலுள்ள நிலம் முஸ்லிம் தீர்க்கத்தரிசி ஹஸ்ரத் ஷா காகு செஸ்டியின் மசார் மற்றும் அதனுடன் இணைந்த மஸ்ஜித் ஷாஹீத் கஞ்ச் ஆகியோருக்குச் சொந்தமானது என்று சோஹைல் கூறியுள்ளார். சோஹைல் பட் சில நில மாஃபியாக்கள், ஐ.எஸ்.ஐ அலுவலர் ஜெய்ன் சாப் ஆகியோரது வழிகாட்டுதலில் இதைச் செய்கிறார் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று சோஹைல் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், "1947இல் பாகிஸ்தான் உருவாகுவதற்கு சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

மேலும் இந்தச் சீக்கியர்கள் கொடூரத்தைக் காட்டுகிறார்கள். இது ஒரு இஸ்லாமிய தேசம். வரலாறும் இந்த நிலமானது எங்களுக்குச் சொந்தமானது என்றுதான் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது வீடியோவில், சீக்கிய சமூகத் தலைவர் கோபால் சிங் சாவ்லா, குருத்வாராவில் வசிக்கும் முன்னாள் சீக்கிய போராளியான ஃபவ்ஜா சிங் ஆகியோருக்கு எதிராகப் பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் சீக்கியர்கள் நடத்தப்படுவது குறித்து கோபால் சாவ்லா வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளித்த சோஹைல் பட், "கோபால் சிங் சாவ்லா கடந்த ஆண்டு இந்த மஜார் வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியிருந்தார்.

சீக்கியர்கள் ஏன் தீய மனிதர்களாக மாறுகிறார்கள். கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் சீக்கிய குருத்வாராக்கள் தோன்றியதன் காரணம் என்ன? பாகிஸ்தான் இரு தேசக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சாக்லா சீக்கியர்களின் ஒரு குழுவுடன் வந்து சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பார் என்று சாவ்லா நம்மை அச்சுறுத்தும் போது இது சகித்துக்கொள்ள முடியாதது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details