உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகம்மது (94) திங்கள்கிழமை (பிப்ரவரி 24) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அங்கு பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.
இந்நிலையில், மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அந்நாட்டின் எட்டாவது பிரதமராக முஹைதீன் யாசினை இன்று அறிவித்தார். இவர் முன்னதாக மலேசியாவின் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் முஹைதீன் யாசினை ஆதரிப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.